×

காரைக்காலில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு

காரைக்கால், மார்ச் 13: காரைக்கால் வலத்தெரு சேனியர்குளத்து வீதியில் வசித்து வந்தவர் ஹரி(38). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மது அருந்திவிட்டு நடந்துவரும் போது, சாலை ஓரமாக மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...