×

அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு சுங்ககேட்- தெரசா கார்னர் வரை தடுப்பு சுவர் அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 13: கரூர் சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் இருந்து திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்ககேட், தெரசா கார்னர் வழியாக சென்று வருகின்றன. இதில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான பிரிவுச் சாலைகளை உள்ளடக்கிய சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் கருப்பக்கவுண்டன்புதூர் பிரிவுச் சாலையில் தாந்தோணிமலை, முத்துலாடம்பட்டி போன்ற பகுதிகளுக்கும், இதே சாலையில் காவிரி நகர் நான்கு தெருக்களுக்கும் பிரிந்து செல்ல முடியாமல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுங்ககேட் பகுதியில் இருந்து தெரசா கார்னர் வரை விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் பார்வையிட்டு சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Visit Inspection ,Chunggate-Theresa Corner ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி