×

கரூர் வெங்கமேட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், மார்ச் 13: வெங்கமேட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் வெங்கமேட்டில் இருந்து தினமும் வேலைக்காகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்னிறனர். காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் நீண்டவரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களாலும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் தாமதமாக செல்லும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை போக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,Karur Venkamath ,
× RELATED திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து...