×

குளித்தலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

குளித்தலை, மார்ச் 13: கரூர் மாவட்ட உலமா சபை, குளித்தலை ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு, தோழமை அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிஐஏ என் ஆர் சி மற்றும் என்பிஆர் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நேற்றுமுன்தினம் மாலை குளித்தலை பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வந்த நிலையில் சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், எஸ்பி பாண்டியராஜன், டிஎஸ்பி கும்மராஜா ஆகியோர் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அறிவித்தபடி குளித்தலை பஸ் நிலையத்தில் சி ஏ என் ஆர் சி என்பிஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் குளித்தலை பஸ் நிலையத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப் பட்டு இருந்தனர். இந்நிலையில் அறிவித்தபடி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித் தலை முத்தவல்லி அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். குளித்தலை ஜூம்மா பள்ளிவாசல் தலைமை உஸ்மானி சம்சுதீன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் ஹஸ் ஜான், சென்னை சம்சுதீன், தமுமுக மாநில துணைத் தலைவர் கோவை சையது, திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் பல்லவிராஜா, மாநில வழக்கறிஞர் கூட்டமைப்பு துணை செயலாளர் சாகுல் ஹமீது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சர்புதீன், மக்கள் ஒற்றுமை மேடை முத்துச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில விவசாய அணி துணை செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குளித்தலை சின்ன பள்ளிவாசல் இர்ஷாத் அகமத் நன்றி கூறினார்.

Tags : General Assembly ,peace talks ,
× RELATED தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய...