×

கரூர் அரசு காலனி வாங்கப்பாளையம் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், மார்ச் 13: கரூர் அரசு காலனி வாங்கப்பாளையம் சாலையில் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படும் சம்பவம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் முதல் அரசு காலனி வரையிலான சாலையோரம் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நகராடசி சார்பில் குப்பை கொட்டக்கூடாது என விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆங்காங்கே கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே சாலையோரம் வைத்து எரிக்கப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கரூர் வாங்கப்பாளையம் சாலையில் அருகம்பாளையம் பகுதியை ஒட்டி நேற்றும் இதே போல கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால், வெளியேறிய புகையினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுபோன்ற நிகழ்வுகள் கருர் மாவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே குப்பைகளை சாலையோரம் எரிக்கும் நிகழ்வுகளை கண்டறிந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur ,government colony ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்