×

அமராவதி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க நடவடிக்கை

கரூர், மார்ச் 13: அமராவதி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அமராவதி ஆற்றில் சுக்காலியூர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம் வரை மணல் அனுமதியின்றி எடுத்து வருகின்றனர். ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் இது தொடர்கிறது. சுக்காலியூர் அமராவதி ஆற்று மேம்பாலத்தின் கீழ்புறத்தில் பகல் வேளைகளில் மணலை எடுத்து சல்லடையில் சலித்து குவியலாக வைத்திருக்கின்றனர். இரவு நேரங்களில் மணலை அனுமதியின்றி எடுத்து செல்கின்றனர்.

அமராவதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் எடுப்பதை தடைசெய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பல முறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் முறையிடப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி மணல் எடுத்துசெல்வதை தடுத்து நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Amaravati river ,
× RELATED அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை...