×

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி, மார்ச் 13:  நீதிமன்ற உத்தரவுபடி பணி வழங்கக்கோரி, சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.  கோட்ட செயலாளர் கலைவாணன் அந்தோணி, கோட்ட துணைத் தலைவர்கள் முருகேசன்,  காவேரி, இணைச்செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 10 ஆயிரம் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களுக்கு, நீதிமன்ற உத்தரவு படி,  தமிழக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை, சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராஜமாணிக்கம் கண்டன உரையாற்றினார்.

Tags : Road Staff ,
× RELATED சாலை பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும்