×

தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு வெல்லம் அனுப்பி வைப்பு

சேலம், மார்ச் 13:  தெலுங்கு வருட பிறப்பையொட்டி சேலத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு வெல்லம் அதிகளவில் அனுப்பப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி ஆலைகள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனை அனுப்பப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெல்லம் விற்பனை 10 முதல் 20 சதவீதம் சரிந்தது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. அங்கு இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். இதையொட்டி சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு அதிகளவில் வெல்லம் அனுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் மொத்த வியாபாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் மாசிமாதத்தையொட்டி ஊர் பண்டிகை ெகாண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெல்லம் விற்பனை நல்ல முறையில் உள்ளது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆந்திராவுக்கு நாள் ஒன்றுக்கு சேலத்தில் இருந்து 30 முதல் 50 டன் வெல்லம் விற்பனை அனுப்பப்பட்டு வருகிறது. 30 கிலோ கொண்ட சிப்பம் ₹ 1230 என விற்னை செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ₹ 39 முதல் ₹ 42 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags : Salem ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி