×

ஆத்தூர் அருகே 4 மகள்களின் தாய் மாயம்

ஆத்தூர், மார்ச் 13: ஆத்தூர் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் இளங்கோ(47). இவருடைய  மனைவி அமுதவள்ளி(38). கடந்த 15வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து  கொண்ட இவர்களுக்கு, 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும், அதே  பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த  15ம் தேதி,  மகளிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அமுதவள்ளி,  மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ பல்வேறு  இடங்களில் மனைவியை தேடினார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர்  இதுகுறித்து கடந்த 29ம் தேதி ஆத்தூர் காவல்நிலையத்தில் இளங்கோ புகார்  அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 4  பெண் குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுவதாகவும், போலீசார் விரைந்து  நடவடிக்கை எடுத்து, எனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என இளங்கோ  தெரிவித்தார்.

Tags : daughters ,Attur ,
× RELATED ஆத்தூர் தலைவாசல் அருகே இருசக்கர...