×

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருச்செங்கோடு, மார்ச் 13: திருச்செங்கோடு அருகே, கூட்டப்பள்ளி காமாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி, அறிஞர் அண்ணா வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காமாட்சியம்மன் திருக்கோயிலின் 39வது ஆண்டு  திருவிழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குட ஊர்வலம், கட்டளைதாரர்கள் பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று  நடைபெற்றது. பொதுமக்கள் காமாட்சி அம்மனுக்கு சீர்வரிசை அடங்கிய தட்டுகளை கொண்டு வந்தனர். இதனை அடுத்து யாகம், ஹோம பூஜைகள் நடைபெற்று கங்கணம் கட்டப்பட்டு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானமும் வளையல், மஞ்சள் கயிறு அடங்கிய பிரசாதமும் வழங்கப்பட்டது.

Tags : Kamakshiman Temple ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி