×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள்

திருச்செங்கோடு, மார்ச் 13: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்காக இன்று மாலை மைதானம் திறப்பு விழா நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக  திருச்செங்கோடு- ஈரோடு சாலை, தேக்கவாடி அருகே அமைக்கப்பட்டுள்ள டிசிஎல் கிரிக்கெட் மைதான திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு  நடக்கிறது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ மைதானத்தை திறந்து வைக்கிறார்.

ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் ,மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், மாவட்ட இளைஞர் அணியினர் மற்றும் முன்னோடிகள் திறப்பு விழாவில் தவறாமல்  கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : MK Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க...