×

கூட்டுறவு சங்கத்தில் ரூ1.25 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், மார்ச் 13: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 6600 மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் பருத்தி ஏலத்தை நடத்தினார்கள். இதில் குவிண்டால் பருத்தி ₹4800 முதல் ₹5800 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ1.25 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. கடந்த மூன்று வாரமாக சங்கத்துக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்