×

கோயில் விழாவில் மாவிளக்கு ஊர்வலம்

போச்சம்பள்ளி, மார்ச் 13:  போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி அம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி கிராமத்தில் திரவுபதியம்மன், செல்லியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்தல், வாணவேடிக்கையுடன் செல்லியம்மனுக்கு தலைகரகம் கூடும் நிகழ்ச்சி ஆகியவையும், 3ம் நாள் காளியம்மன், திரவுபதியம்மன் தேர்வீதி உலாவும் நடைபெற்றது. 4ம் நாள் அர்ஜூனன், திரவுபதியம்மன் தேர் ஊர்வலம் நடைபெற்றது.

விழாவின் 5ம் நாளான நேற்று செல்லியம்மன், காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன், பம்பை மேளத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் பெருமாள், துணைத் தலைவர் முரளி, முன்னாள் தலைவர் மணி, மந்திரிகவுண்டர் சிவா மற்றும் ஆவத்துவாடி, சுண்டகாப்பட்டி, மோட்டூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Mavilakku ,temple ceremony ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...