×

அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்புவிழா ₹1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நிர்வாகிக்கு பாராட்டு

ஓசூர், மார்ச் 13:  ஓசூர் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்புவிழாவில் ₹1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நிர்வாகிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஓசூர் அருகே அந்திவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அப்போது, அந்திவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாதேவ புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக நகர பொருளாளருமான சென்னீரப்பா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ராணி, உதவித் தலைமை ஆசிரியர் மலர்விழி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் லில்லிபுஷ்பம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். இந்த பள்ளி கடந்த 2011-2012 கல்வி ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக இருந்தது. இதனை தரம் உயர்த்த முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக நகர பொருளாளருமான சென்னீரப்பா அரசுக்கு செலுத்த வேண்டிய ₹1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி, விழாவில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags : Commencement ,building ,Government School ,
× RELATED ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த...