×

சூளகிரி அருகே எருதாட்டம் கோலாகலம்

சூளகிரி, மார்ச் 13: சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் எருதாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட காளைகளை ஓடவிட்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சப்படி கிராமத்தில், நேற்று காலை எருதாட்டம் நடைபெற்றது. சூளகிரி, பெரிய சப்படி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, குருபராத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சென்னப்பள்ளி, மோதுகுலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள கோயில் மைதானத்தில் ஓடவிட்டனர். எருதாட்டத்தை காண 1000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தை கண்டு ஓட்டம் பிடித்த காளைகளை கண்டு, இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். குறிப்பிட்ட நேரத்தில் இலக்கினை எட்டிய காளைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சீறிப்பாய்ந்து சென்ற காளைகளுக்கு போக்கு காட்டி, மடக்கிய இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags : burial ground ,Sulagiri ,
× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மயான நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்