×

8 இடங்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடங்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் கலெக்டர், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகளை குறைகளை கேட்டறிகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் 18ம் தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கம் அருகே, பிதிரெட்டி அடுத்த பூனப்பள்ளி கிராமத்தில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், கிருஷ்ணகிரி தாலுகா ஆலப்பட்டி அடுத்த கங்கலேரி கிராமத்தில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி தரப்பு முருக்கம்பள்ளம் கிராமத்தில் கிருஷ்ணகிரி தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையிலும், அஞ்செட்டி தாலுகா எ.புதூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

அதேபோல், போச்சம்பள்ளி தாலுகா மாதம்பதி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அடுத்த தீர்த்தகிரி வலசை கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்டம் முகம் நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி(வியாழன்) காலை 11 மணிக்கு சூளகிரி தாலுகா மேலுமலை கிராமத்தில், கலெக்டர் தலைமையிலும், ஓசூர் தாலுகா மத்திகிரி அடுத்த கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் முகாம் நடைபெறுகிறது. எனவே, முகாமில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Public Relations Project Camp ,locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு