×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு

தர்மபுரி, மார்ச் 13: பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. தர்மபுரி- பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலை, பொம்மிடி முனியப்பன் கோயில் எதிரே சாலையோரத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இதன் மூலம் பொம்மிடி, பில்பருத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பையர்நத்தம், துறிஞ்சிபட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கோடை காலம் என்பதால், வறட்சி ஏற்பட்டு கிணறுகள் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி- பாப்பிரெட்டிப்பட்டி பிரதான சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Breakdown ,Oakenakkal ,Pappretipatti ,
× RELATED பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்...