×

தர்மபுரி மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி மாவட்ட பாஜக புதிய தலைவராக ஆனந்தகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வரதராஜன், பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், நகரத்தலைவர் சக்திவேல், வக்கீல் ரமேஷ்வர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை (சிஏஏ) பற்றி விளக்கமாக பேசிய பாஜகவினர் மீது, தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் தலைதூக்கி உள்ள தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில், பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்,’ என்றார்.

Tags : Dharmapuri district ,BJP ,
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை