பென்னாகரம் அருகே இளம்பெண் மர்மச்சாவு ஆர்டிஓ விசாரணை

பென்னாகரம், மார்ச் 13: பென்னாகரம் அடுத்த கே.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர்(28). இவருக்கும் செங்கனூர் பகுதியை சேர்ந்த சுதா(22) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3வயதில் மகனும், 3மாத பெண் குழந்தையும் உள்ளது. ஷங்கர் திருப்பூரில் தங்கி கட்டிட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை, சுதா வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லதாவின் சடலத்தை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>