×

காரிமங்கலத்தில் ஒரே சாலையில் 3 டாஸ்மாக் கடைகள்

காரிமங்கலம், மார்ச் 13:  காரிமங்கலத்தில் ஒரே சாலையில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் செல்லும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் அடுத்தடுத்து 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளால், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

இத்தகைய விபத்துகளால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து  வருகின்றனர். மேலும் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துவதால், அவ்வழியே செல்லும் பெண்கள், மாணவிகள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Task Shop ,road ,Karimangalam ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை