×

தீர்த்தமலையில் தேரோட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

தர்மபுரி, மார்ச் 13: தீர்த்தமலையில் மாசி மக தேரோட்ட திருவிழா நடைபெறுவதையொட்டி, நாளை அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்ட திருவிழா நடைபெறுவதையொட்டி, நாளை (14ம் தேதி) அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகும்.  உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் சார்நிலைக் கருவூலத்தில், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : holidays ,Therottam Aroor ,Pappretippatti ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...