×

தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ₹5 லட்சம் மோசடி

தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி அருகே அரசு ேவலை வாங்கி தருவதாக, ₹5லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் பெத்தநாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அழகேசன்(56). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிஏ.பிஎட் படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், தர்மபுரி மொரப்பூர் கச்சேரிமேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமாருக்கும், அழகேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அரசு வேலை வாங்கித் தருவதாக முத்துக்குமார் கூறியுள்ளார். அதற்கு ₹6லட்சம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அழகேசன் முத்துகுமாரிடம், ₹6லட்சம் கொடுத்தார்.

ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், பணத்தை திருப்பி கொடுக்கும்படி, முத்துகுமாரிடம் அழகேசன் கூறியுள்ளார். இதையடுத்து அவர் ₹1லட்சத்தை மட்டும் அழகேசனிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில் அழகேசன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துக்குமார் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...