×

பூண்டி பகுதியில் காப்பீடு செலுத்தியும் காய்ந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை

* விவசாயிகள் குற்றச்சாட்டு
* போராட்டம் நடத்த முடிவு

திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்கும் பூண்டி நீர்த்தேக்கம் அருகிலேயே, பருவமழை முற்றிலும் பொய்த்ததாலும், நீர்நிலைகள் வறண்டதாலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. நெற்பயிருக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்தியும், வேளாண்மை அதிகாரிகள் நிவாரணம் வழங்காமல் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நெல் விளைச்சலுக்கு பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் பருவமழை முற்றிலும் பொய்த்ததால், பொதுப்பணித் துறை மற்றும் ஒன்றியக் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், ஏரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் நடைபெற்று வரும் பூண்டி, ஒதப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில், எப்போதும்போல கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் பருவமழை பெய்யும் என நம்பி, இரண்டாம் போக சம்பா சாகுபடியை தொடங்கினர்.

இதில், பொன்னி ரக நெற்பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். ஆனால், கடந்த 1997, 1998ம் ஆண்டுகளை போல 1999ம் பருவமழை பெய்யத் தவறியதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், ஏரி, குளங்கள் வறண்டன.
இதன் காரணமாக பாசன நீரின்றி சம்பா பருவ நெல் பயிர்கள் கருகி, தீய்ந்தது. ஒரு மூட்டை விதை நெல் ரூ.1500க்கு வாங்கி, ஆள் பற்றாக்குறை காரணமாக முழுக்க முழுக்க திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்று நட்டனர். மேலும், ஒரு ஏக்கருக்கு விதை முதல் அறுவடை வரை நகை அடகு மற்றும் பயிர்க் கடன் பெற்று சாகுபடி செய்த பயிர்கள் வீணாகிவிட்டதே என்று புலம்பித் தவித்தனர். இவ்வாறு, பூண்டி வட்டாரத்தில் மட்டும் சுமார் 700 ஏக்கர் நெல் பயிர்கள் கருகியதால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்தனர்.

இதில், அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டு தொகையை செலுத்தியும், 150 விவசாயிகளுக்கு மட்டும் 1999ம் ஆண்டு நிவாரணம் வழங்கப்பட்டது. மீதமுள்ள, விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதிகளில் ஏரிப் பாசனத்தை பெரிதும் நம்பியே நிலங்கள் உள்ளன. இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் ஏரி நீர் மற்றும் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். கருகிய நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளோம். கடந்த 2017, 2018ம் ஆண்டுகளிலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்போதும் காப்பீட்டு தொகையை செலுத்தி இருந்தோம். ஆனால், நிவாரணம் வழங்கவில்லை.

2019ம் ஆண்டிலும் நெற்பயிர்கள் கருகி ஓராண்டு முடிந்தும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, காப்பீட்டு தொகை செலுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்காவிடில், அனைத்து விவசாயிகளும் ஒன்றுகூடி விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Tags : area ,Bundi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...