×

ஆவணம் தொலைந்ததாக சான்று பெற்று வேறொருவரிடம் விற்ற சொத்தை செட்டில்மென்ட் செய்தவர் கைது: நில அபகரிப்பு தடுப்பு போலீஸ் அதிரடி

திருவள்ளூர், மார்ச் 13: அசல் ஆவணங்களை ஒருவரிடம் வழங்கி ரூ.32 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு அசல் ஆவணங்கள் தொலைந்ததாக சான்று பெற்று, தனது மகன் பெயரில் 1.08 ஏக்கர் தான செட்டில்மென்ட் செய்தவரை, திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, கிழக்கு தாம்பரம் சுதானந்தபாரதி தெருவை சேர்ந்தவர் வாராகி (44). இவர் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் கிராமம், சூசையப்பர் தெருவை சேர்ந்த மார்ட்டின்
(55) என்பவரிடம், ரூ.32 லட்சம் கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக, காஞ்சிபுரம் மாவட்டம், எச்சூர் கிராம சர்வே எண்களில் அடங்கிய 1.08 ஏக்கர் நிலத்தின் அசல் ஆவணங்கள் இரண்டையும் பெற்றுக்கொண்டார்.

அதற்கு கடந்த 16.11.2015ம் தேதி ஓரு கடன் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், எழுதி கொடுத்த கடன் பத்திரத்தை மறைத்துவிட்டு, மேற்படி சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைத்து விட்டதாக, மப்பேடு காவல் நிலையத்தில் மார்ட்டின் ஒரு பொய்யான புகார் அளித்து, தொலைந்துபோனதற்கான சான்றிதழ் பெற்றார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு  09.02.2019ம் தேதி, மார்ட்டின், தனது மகன் அந்தைய மெக்ஸிமஸ் என்பவர் பெயருக்கு, மேற்படி சொத்தினை தானசெட்டில்மெண்ட் செய்துவைத்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதையறிந்த வாராகி, இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் கொடுத்தார்.

புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். எஸ்.ஐ.,க்கள் வெங்கடேசன், சூரியகுமார் ஆகியோர் வழக்குப்பதிந்து, மார்ட்டினை நேற்று கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திருவேற்காடு எஸ்ஏ கல்லூரியில் ஆத்திசூடி இலக்கியத் தேடல் நிகழ்ச்சி