×

ஒரத்தநாடு அருகே ஊராட்சி தலைவருக்கு அடி உதை


ஒரத்தநாடு, மார்ச் 13: ஒரத்தநாடு அருகே ஊராட்சி தலைவரை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பநாடு அருகே உள்ள பொய்யுண்டார் குடிக்காடு ஊராட்சி தலைவர் தையல்நாயகி. இவர் நேற்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தன், தற்போதைய ஊராட்சி துணைத்தலைவர் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவாஜி, ஆசைத்தம்பி, குமார், கருப்பையா, ராஜீவ்காந்தி உள்ளிட்ட 11 பேர் சென்று தையல்நாயகியை தாக்கினர். இதில் காயமடைந்த தையல்நாயகி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் தையல்நாயகி கூறும்போது, என்னை நிர்வாகம் செய்யவிடாமல் ஊராட்சி துணைத்தலைவர் ராஜாவை நிர்வாகம் செய்யுமாறு ஏற்கனவே இருந்த ஊராட்சி தலைவர் ஆனந்தன் நிர்பந்தம் செய்கிறார். மேலும் 100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளராக இருந்த சரிதா என்பவரை நிர்வாக சீர்கேடு காரணமாக மாற்றி வேறு ஒருவரை நான் நியமித்தேன். இதனால் ஆத்திரமடைந்த சரிதா, குண்டர்களை அனுப்பி என்னை தாக்கியிருக்கிறார். எனது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. என்னை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : panchayat leader ,Orathanadu ,
× RELATED சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை...