×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பேராவூரணி, மார்ச் 13: பேராவூரணி அருகே உள்ள துறவிக்காட்டில் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்து கொரோனா வைரஸ் பாதிப்பு, அவற்றை தவிர்ப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர்கள் பொன்.

அறிவானந்தம், வேம்பிரத்தியா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேம்பையன், ஆசிரியர் பயிற்றுநர் முருகேசன் ஆகியோர் பேசினர். கை கழுவும் முறை குறித்து சுகாதார ஆய்வாளர் ராம்குமார் விளக்கம அளித்தார்.தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், ஒட்டங்காடு கலைமகள் நர்சரி பள்ளி தாளாளர் ஆற்றல் மற்றும் பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Corona Prevention Awareness Camp ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்