×

தூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, மார்ச் 13: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (13ம் தேதி) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களை 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Employment Camp ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் இருந்து 913 தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு