×

புள்ளிமான் பள்ளியில் பட்டமளிப்பு விழா

பணகுடி, மார்ச் 13: பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி பொன்லட்சுமி தலைமை வகித்தார். புஷ்பஷாலினி வரவேற்று பேசினார். மாணவ- மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி ரெக்லின் சிபிக்சா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மழலையர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளையும் மற்றும் சிறப்புரையையும் பள்ளி முதல்வர் லாரன்ஸ் வழங்கினார். மாணவிகள் மரியா, விஜிதா நன்றி கூறினர். விழாவில் பெற்றோரும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Graduation ceremony ,Pointman School ,
× RELATED வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா