நாங்குநேரி கல்லூரி ஆண்டுவிழா

நாங்குநேரி, மார்ச் 13: நாங்கு நேரி, வாகைகுளம் ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21வது ஆண்டு விழா நடந்தது. செயலர் திருமாறன் தலைமை வகித்தார். இசக்கிராஜா வரவேற்றார். முதல்வர்ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக நாராயணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளின் முதல்வர்கள் அழகுலிங்கம், சாம் டேவிட், மகேஷ்வரி, சுகிர்தா, டிக்சன், முன்னாள் முதல்வர் மகாலிங்கம், ஐஓபி நாங்குநேரி கிளை மேலாளர் சிட்டிபாபு சந்திரகிரி ஆகியோர் பேசினர். விழாவில் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகிலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>