×

தென்காசியில் சுகாதாரம், துப்புரவு, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

தென்காசி, மார்ச் 13:  தென்காசியில் நகராட்சி சுகாதாரம், துப்புரவு மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா முன்னிலை வகித்தார். ரெடிங்டன் இந்தியா லிமிடெட் சண்முகவடிவு, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், மாரிமுத்து, மேற்பார்வையாளர்கள் சுடலைமணி, முத்து, ஷிபா மருத்துவமனை குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் தென்காசி நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்ட 150 பேருக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பார்வை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற முகாம்கள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு முகமூடி, கை உறை உள்ளிட்ட சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.

Tags : camp ,Tenkasi ,prevention workers ,
× RELATED மருத்துவ முகாம்