×

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இடமாற்றம்

களக்காடு, மார்ச் 13:  களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ்  சேவியர், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநராக  நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு களக்காடு தலையணையில் பாராட்டு  விழா நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் (பொறுப்பு) இளங்கோ  தலைமை வகித்தார். வனச்சரகர்கள் களக்காடு புகழேந்தி, கோதையாறு பாலாஜி முன்னிலை  வகித்தனர். வனக்காப்பாளர் முத்துசெல்வன் வரவேற்றார். வனத்துறை ஊழியர்கள்,  வன அலுவலக ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் கலந்து கொண்டனர். துணை  இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.  வனவர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags : Deputy Director ,
× RELATED பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு தடை