×

வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு, மார்ச் 13: செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 7வது முறையாக மழலைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் மழலைகளுக்கான 9வது ஆண்டு விழா ஆகியவை பள்ளி  வளாகத்தில் நேற்று நடந்தது. வித்யாசாகர் கல்வி குழும  தலைவர் அஸ்திமல் சுரானா தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் கன்காரியா, தாளாளர் விகாஷ் சுரானா, இயக்குனர் ஆச்சார்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் பள்ளியின் முதல்வர் கோவிந்தசாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அனிதா கலந்து கொண்டு. மழலைகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். பின்னர், ‘ஜலக் 2020’ என்ற தலைப்பில் மழலையர் பிரிவுக்கான சிறப்பு படத்தொகுப்பை திறந்து வைத்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Graduation ceremony ,Vidyasagar Global School ,
× RELATED புள்ளிமான் பள்ளியில் பட்டமளிப்பு விழா