×

முத்தியால்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

வாலாஜாபாத், மார்ச் 13: முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதிமுக மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் கலந்து கொண்டு, சித்த வைத்திய முறைப்படி கொடிய விஷங்களையும் கிருமிகளையும் அழிக்கும் சிறியா நங்கை மூலிகை  கசாயம், கொரோனா வைரஸ் கிருமிகளை அழித்து நோய் வராமல் தடுக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, சிறியா நங்கை மூலிகை கசாயத்தை பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கினார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை பெற நெல்லிக்காய் சாப்பிடுவதன் அவசியம் மற்றும் பள்ளி குழந்தைகள் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்பது குறித்து சுகாதார பணியாளர்கள் செய்முறை விளக்கம் அளித்து, மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், தன் சுத்தத்தை விளக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் தங்களின் கை கழுவும் பயன்பாட்டுக்காக  சோப்புகளை  வழங்கினார்.

Tags : Muthialpet Government School ,
× RELATED மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ