×

விமானப் படையில் வேலைவாய்ப்பு: வழிமுறைகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம், மார்ச் 13: காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் விமானப் படையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் வீரராகவன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் பழனி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் வெங்கடேசன், மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற என்ன செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்தி பேசியதுடன் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மண்டலத்தின் விங் கமாண்டர் சைலேஷ்குமார்,

காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் (பொ) ரேவதி, ஜூனியர் வேலைவாய்ப்பு அலுவலர் தனிகைவேலு ஆகியோர் கலந்துகொண்டு இந்திய விமானப்படையில் பணிபுரிய என்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. எந்த தேர்வுகளை எழுத வேண்டும் என புரஜக்டர் மூலம் விளக்கமளித்து, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.மேலும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் மாணவர்கள் எவ்வாறு தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என கருத்துக்கள் வழங்கினர். முடிவில் இயற்பியல் துறைத்தலைவர் ஏகாம்பரம் நன்றி தெரிவித்தார். கல்லூரி துணை முதல்வர் பிரகாஷ், வணிகவியல் துறைத்தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...