×

வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

வாலாஜாபாத், மார்ச் 13: வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தை புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஒழையூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்காக இதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 25க்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.அங்கன்வாடி மையம் பழமையாக ஆனதாலும், அதனை முறையாக பராமரிக்காமல் விட்டதால, சுவர்களி ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு மேற்கூரையான சிமென்ட் ஷீட்களில் ஓட்டை விழுந்து மழை காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. அதேபோல் ெவயில் காலங்களில், குழந்தைகள் உள்ளே உட்கார முடியாதபடி, அனல் காற்று விசுகிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து அங்கன்வாடி மையத்தை, அதே பகுதியில் உள்ள ஊராட்சி நூலக கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது குழந்தைகள் நூலக கட்டிடத்தில் படிக்கின்றனர். ஆனால், நூலகத்துக்கு வரும் வாசகர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் புத்தகத்தை வாசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தொகுதி எம்எல்ஏ அல்லது எம்பி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, மேட்டூர் கிராம குழந்தைகளுக்கு புதிய அங்கன்வாடி மையம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Anganwadi Center ,Walajabad Union Ozhayur ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்