×

சிறுநீரக விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு, மார்ச் 13: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சார்பில், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சிறுநீரக தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணியை,  மருத்துவமனை டின் சாந்திமலர் துவங்கி வைத்தார்.

கண்காணிப்பாளர் ஹரிகரன், நிலைய மருத்துவ அலுவலர் அனுபமா, சிறுநீரகத் துறை கண்காணிப்பாளர் சண்முகம், சிறுநீரகத் துறை மருத்துவர் நாகராஜன், பொது மருத்துவத்துறை அலுவலர் மருத்துவர் நர்மதா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...