×

அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர், மார்ச் 13: உத்திரமேரூர் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 1966ம் ஆண்டு துவங்கப்பட்டு 54 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு திருமுக்கூடல், கரும்பாக்கம், பினாயூர், சாத்தனஞ்சேரி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்வி பெற 15 கிமீ தொலைவில் உள்ள வாலாஜாபாத் வரை செல்ல வேண்டியுள்ளது.

 கிராமங்களில் இருந்து வாலாஜாபாத் வரை உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லை. மேலும் திருமுக்கூடல் சுற்றி கல்குவாரிகள் செயல்படுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். இதனால், பெற்றோர்கள் தங்களளது பிள்ளைகளை, மேல்நிலைக் கல்வி தடைபடுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இப்பள்ளியில் மேல்நிலைக் கல்விக்கு தேவையான கட்டிட வசதி, இடவசதி என அனைத்து வசதிகளும் போதுமான அளவில் உள்ளதால் இதனை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் மற்றும்  கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Government ,school ,
× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?