×

உத்திரமேரூர் பேரூராட்சியில் சர்வதேச மகளிர் தினவிழா

உத்திரமேரூர், மார்ச் 13: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், தனிநபர் இல்லக் கழிப்பறையின் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பின்னர் பேரூராட்சி ஊழியர்களுக்கு இடையே பாட்டு, பேச்சு, கவிதை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, துப்புரவு பணியில் சிறந்த முறையில் பணியாற்றிய அனைத்து துப்புரவு பணியாளர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டடினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள், சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : International Women's Day Festival ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...