×

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளால் மன உளைச்சலடையும் மாணவர்கள்

அவிநாசி,மார்ச்.13:அவிநாசி பகுதியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை செயல்பட்டு வருகின்றனர். தற்போது, பொதுத்தேர்வில் பங்கேற்கும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக கல்வித்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் பள்ளியில் காலை மற்றும் இரவு நேரங்கள், விடுமுறை நாள்கள் உள்ளிட்டவைகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். தற்போது பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 7.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் சில பள்ளிகளில், மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். குறிப்பாக தேர்வு எழுதி வந்தாலும், அடுத்த தேர்வுக்காக இரவு அங்கேயே தங்கி சிறப்பு வகுப்பில் பயில சொல்கின்றனர். இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு  ஆளாவது மட்டுமின்றி, உரிய நேரத்திற்கு உணவு அருந்தாமலும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
அரசு, தனியார் பள்ளிகள் விடுமுறையிலோ, பள்ளி வேலைநாட்களில் காலை, மாலை நேரங்களிலோ சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், பள்ளியை தொடர்ந்து நடத்தவிடாமல் பூட்டிவிடுவது உள்பட கடுமையான உத்தரவுகளை கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதுபோல சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதை கல்வித்துறை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : schools ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...