×

ெகாரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வேண்டி சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் மிருத்யுஞ்ஜெய ஹோமம்

அவிநாசி, மார்ச் 13: ெகாரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து பொதுமக்களின் நலன் வேண்டி, சேவூர் வாலீஸ்வரர் கோயிலில், ஐந்து நாட்கள் தொடர்ந்து
மிருத்யுஞ்ெஜய ஹோமம் நடைபெறுகிறது. சேவூர் அறம்வளர்த்தநாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயிலில் ெகாரோனா வைரசால், மக்கள் பாதிப்பின்றி நலமுடன் வாழ வேண்டி, மிருத்யுஞ்ெஜய ஹோமம் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் தொடர்ந்து மிருத்யுஞ்ெஜய ஹோமம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து வாலீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் காசி விஸ்வநாதன் கூறியது:ெகாரோனா வைரசால் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. பொதுமக்கள் நோய் பாதிப்பின்றி வாழ, ஆரோக்கியத்தை தரக்கூடிய மிருத்யுஞ்ெஜய ஹோமம் நடைபெறுகிறது. எதிர்மறை சக்திகளை விலக்கி, தெய்வீக ஆற்றல் நிறையக் கூடிய மிருத்யுஞ்ெஜய ஹோமம்  இங்கு துவங்கப்பட்டுள்ளது. எனவே, ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தின் சார்பில், ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஹோமத்தில் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர் என்றார்.

Tags : Myrthunjaya Home ,Sevur Valeeswarar Temple ,
× RELATED மாநில அளவிலான போட்டிகளில்...