×

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் கடைகள் இல்லாததால் பயணிகள் அவதி

திருப்பூர், மார்ச் 13:திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த, கடைகள் பூட்டபட்டதையடுத்து, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் 79 கடைகள் இருந்தன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் இடித்து நவீன முறையில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. அதன்படி கடந்த 8ம் தேதி மாலை 5 மணிக்குள் கடைக்காரர்கள் தங்கள் கடைகளை காலி செய்துவிட்டு மாநகராட்சி வசம் ஒப்படைத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டு போட்டு தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். இதன் காரணமாக பழைய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்டவை கிடைக்காமல் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்த சிலர் தண்ணீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை தரையில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : shops ,bus station ,Tirupur ,commuters ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி