×

காங்கயம் அருகே சீரமைக்கபட்ட சாலை 2 மாதங்களுக்குள் மீண்டும் பழுது

காங்கயம்,மார்ச் 13: காங்கயத்தில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் அதிக போக்குவரத்து அதிக போக்குவரத்து காரணமாகவே இந்த சாலை  காங்கயத்தில் இருந்து திட்டுப்பாறை வரை சுமார் 8 கி.மீட்டர் தூரத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலையின் நடுவில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சாலையின் மையத்தடுப்பை ஒட்டி ஏற்கனவே இருந்த  சாலையில் பல இடங்களில் பழுதானதால் அந்த குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேட்ஜ் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் செப்பனிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேட்ஜ் போட்டு மறைக்கப்பட்ட அந்த இடங்கள் 2 மாதங்களுக்குள் மீண்டும் பழுதாகி வருகிறது. குறிப்பாக காங்கயம் அருகே கல்லேரி என்ற இடத்தில் இவ்வாறு சாலை மீண்டும் பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தடுமாறி செல்கிறது. மேலும், இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி பழுதான இடங்களை நல்ல முறையில் தார்போட்டு சரி செய்ய வேண்டும். மேலும் பழைய சாலை முழுவதையும் புதிப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி