×

புதுமந்து சாலையோரங்களில் கற்குவியல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

ஊட்டி, மார்ச் 13: புதுமந்து செல்லும் சாலையில், சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலையில் போடப்பட்டுள்ள கற்குவியல்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து தேனாடுகம்பை செல்லும் சாலையில் புதுமந்து பகுதியில் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்படாமலும், மண் சரிவு ஏற்படாமல் தடுக்க கான்கிரீட்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது புதுமந்து பள்ளி வளாகத்திற்கு எதிரே உள்ள சாலையோரத்தில் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இச்சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இந்த கற்குவியல்கள் மற்றும் இயந்திரங்கள் இருப்பது தெரிவதில்லை. குறிப்பாக, இரு சக்கர வானங்களில் செல்பவர்களுக்கு இந்த கற்குவியல்கள் இருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.எனவே, புதுமந்து சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற வேண்டும். கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை சாலையோரத்தில் ஒதுக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : collision ,roads ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு