×

பெ.நா.பாளையத்தில் தொட்டி, கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு, காட்டுப்பன்றி மீட்பு

பெ.நா.பாளையம், மார்ச் 13: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். காஸ் கம்பெனியிலிருந்து இடிகரை செல்லும் வழியில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று காலை 4 வயதுடைய சினை பசுமாடு ஒன்று அங்குள்ள 15 அடி ஆழமுள்ள தொட்டியில் விழுந்தது. இதை பார்த்த தோட்டக்காரர் ரங்கசாமி பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  அங்கு வந்த உதவி அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் கண்ணன், சூர்யா, கிரிராஜா, திலகர் ஆகியோர் கயிறு கட்டி பசுமாட்டை உயிடன் மீட்டனர்.

அதே போல், நேற்று முன்தினம் மதியம் காட்டுப்பன்றிகள் கூட்டமாக தெற்குபாளையத்திற்குள்  புகுந்தன. இங்குள்ள மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள தோட்டத்தில்  சுற்றித்திரிந்தபோது அதில் ஒரு காட்டுபன்றி அருகிலிருந்த 100 அடி  ஆழக்கிணற்றில் விழுந்து விட்டது. காலையில் கிணற்றில் தண்ணீர் இறைக்கச்  சென்ற தோட்டக்காரர் அதனைப் பார்த்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு  தகவல் கொடுத்தார். அங்கு வந்த வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மற்றும்  தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி சுரேஷ்குமார், சோமு,கண்ணன் உள்ளிடோர் அதனை  கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். அதன்் பின காட்டுப்பன்றி மீண்டும் பாலமலை  காட்டில் விடப்பட்டது

Tags : Bay of Bengal ,
× RELATED வங்கக்கடலுக்கு இன்றும் நாளையும்...