×

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்

கோவை, மார்ச்.13:  கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வரும் 14ம் தேதி (நாளை) கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது.தொழில்நுடப் கல்வி ஆணையரின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கை 2020க்காக 51 சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பி.இ, பி.டெக் பொறியியல் பாடபிரிவுகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி, தகுந்த பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்ய உதவுவதே இதன் நோக்கம் ஆகும்.

மேலும் கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 14ம் தேதி (நாளை) கல்லூரியின் முதல்வர் தாமரை, முதன்மைக் கல்வி அலுவலர் புருஷோத்தம்மன் ஆகியோரின் முன்னிலையில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் பிளாஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பப்பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பாக உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

Tags : Awareness Meeting on Engineering Admission ,Head Teachers ,Secondary School ,
× RELATED அதிக பாதிப்புள்ள சென்னை உள்ளிட்ட...