×

ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தாக்கியோரை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

கோவை, மார்ச் 13: கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தாக்கியவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கோவை, சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சூர்யபிரகாஷ் (28). ஆர்.எஸ்.எஸ். பகுதி செயலாளராக உள்ளார். இவர், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையில் மரச்செக்கு எண்ணெய் கடை வைத்துள்ளார்.நேற்றுமுன் தினம் இரவு 7 மணியளவில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் கடைக்குள் திடீரென புகுந்து அவர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர்.இதில் காயமடைந்த சூர்யபிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இத்தகவலறிந்த இந்து அமைப்பினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மதுக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை மாநகர துணை கமிஷனர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தாக்குதல் நடத்தி தப்பியோடியவர்கள் மீது போத்தனூர் போலீசார் கொலை முயற்சி உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர்.இதற்கிடையே கடை மற்றும் அப்பகுதிகளில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் 25 மதிக்கத்தக்க இளைஞர்கள் என தெரிய வந்துள்ளது. தப்பியோடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : RSS. ,attackers ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம்...