×

காது வில்லை இல்லாத கால்நடைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காது

ஈரோடு, மார்ச் 13: காது வில்லை இல்லாத கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வாறு தடுப்பூசி போடப்படும் போது கால்நடைகளுக்கு பிரத்யேக அடையாள எண் கொண்ட காதுவில்லைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.தற்போது, மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லைகள் பொருத்துவது அவசியமாகிறது. அவ்வாறு காதுவில்லைகள் பொருத்தப்படும் கால்நடைகளின் விபரங்கள் கால்நடை பெருக்கம் மற்றும் நலப்பணிகள் தகவல் தொகுப்பில் தொகுக்கப்பட உள்ளது.வரும் காலங்களில் காதுவில்லைகள் பொருத்தப்பட்ட கால்நடைகளுக்கு மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படும். எனவே, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் காதுவில்லைகள் பொருத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி