×

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா கேட்டு மன்னையில் 26, 27ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க முடிவு

முத்துப்பேட்டை, மார்ச் 13: வருகிற 26, 27ம்தேதி மன்னார்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வது என்று அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ரெகுபதி முன்னிலை வகித்தார். இதில் மாநில அமைப்பாளர் சாமி நடராஜன் கலந்துக்கொண்டு பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்ககோரி வரும் 26, 27ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகளவில் கலந்து கொள்வது. கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்ககோரி முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் இன்று மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்பது. கோயில் இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இதுநாள்வரை எந்தவித அரசு நிவாரணமும் கிடைக்கவில்லை.

நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் துரைராஜ், இடை கமிட்டி உறுப்பினர்கள் உப்பூர் ராஜேந்திரன், வீரசேகரன், நிர்வாகிகள் வீரன்வயல் சுப்பிரமணியன், பரந்தாமன், விஜயலட்சுமி, பெரியசாமி, ஆலங்காடு துரைராஜ், தில்லைவிளாகம் ஜமுனாராணி, வடக்கு வெள்ளாதிக்காடு சோமசுந்தரம் மற்றும் ஏராளமான ஏழை எளிய மக்கள், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து உள்பட பலர் கொண்டனர்.முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக பெரியசாமி, செயலாளராக அமிர்தலிங்கம் மற்றும் 10 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Residents ,state convention ,temple lands ,
× RELATED சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குணமடைந்தனர்