×

சிஏஏ எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் 18ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் இந்திய இறையாண்மை பாதுகாப்பு கூட்டத்தில் முடிவு

மன்னார்குடி, மார்ச் 13: நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வருகிற 18ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிறைப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய இறையாண்மை பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய இறையாண்மை பாதுகாப்பு பொதுக்கூட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. நகர தலைவர் அபுபாஸ்லான் தலைமை வகித்தார். பொருளாளர் இஸ்மத், துணை செயலாளர் ராயல் சித்திக், துணைத் தலைவர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர்கள் கோவை ரகமதுல்லா, பர்சானா ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேசுகையில், மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளித்து குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை உடன் வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.
கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க மறுத்தால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்ற வில்லையெனில் வருகிற 18ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிறைப்பு போராட்டம் நடைபெறும் என பேசினார். இக்கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். நகர செயலாளர் நைனா முகமது வரவேற்றார். மரக்கடை கிளை செயலாளர் சாலிஹ் நன்றி கூறினார்.

Tags : CAA ,fight ,jail ,Indian Sovereign Security Meeting ,
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...