×

முத்துப்பேட்டை அரசு பள்ளியில் இலக்கிய கலைவிழா

முத்துப்பேட்டை, மார்ச் 13: முத்துப்பேட்டை பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய கலை விழா தலைமையாசிரியர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் விமலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சாந்தி வரவேற்று பேசினார். ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வசித்தார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், முருகபாஸ்கர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, வட்டார வளமைய பயிற்றுனர் சுரேஷ், ஆகியோர் பேசினர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Tags : Literary Festival ,Muthupettai Government School ,
× RELATED முத்துப்பேட்டை அரசு பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு